பழமொழி நானூறு 191 - 195 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 191 - 195 of 400 பாடல்கள்

191. புன்சொல்லும் நன்சொல்லும் பொய்யின்(று) உணர்கிற்பார்
வன்சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ?
புன்சொல் இடர்ப்படுப்ப தல்லால் ஒருவனை
'இன்சொல் இடர்ப்படுப்ப தில்'.

விளக்கவுரை :

192. மெய்ந்நீர ராகி விரியப் புகுவார்க்கும்
பொய்ந்நீர ராகிப் பொருளை முடிப்பார்க்கும்
எந்நீர ராயினும் ஆகு அவரவர்
'தந்நீர ராதல் தலை'.

விளக்கவுரை :

193. யாவரே யாயினும் இழந்த பொருளுடையார்
தேவரே யாயினும் தீங்கோர்ப்பர் - பாவை
படத்தோன்று நல்லாய்! 'நெடுவேல் கெடுத்தான்
குடத்துளும் நாடி விடும்'.

விளக்கவுரை :

194. துயிலும் பொழுதத்(து) உடைஊண்மேற் கொண்டு
வெயில்விரி போழ்தின் வெளிப்பட்டா ராகி
அயில்போலுங் கண்ணாய்! அடைந்தார்போல் காட்டி
'மயில்போலும் கள்வர் உடைத்து'.

விளக்கவுரை :

195. செல்லற்க சேர்ந்தார் புலம்புறச் செல்லாது
நில்லற்க நீத்தார் நெறியொரீப் - பல்காலும்
நாடுக தான்கண்ட நுட்பத்தைக் கேளாதே
'ஓடுக ஊரோடு மாறு'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books