கார் நாற்பது 21 - 25 of 40 பாடல்கள்
21. பொறிமாண் புனைதிண்டேர் போந்த வழியே
சிறுமுல்லைப்
போதெல்லாஞ் செவ்வி - நறுநுதற்
செல்வ
மழைந்தடங்கட் சின்மொழிப் பேதைவாய்
முள்ளெயி
றேய்ப்ப வடிந்து.
விளக்கவுரை :
22. இளையரு மீர்ங்கட் டயர வுளையணிந்து
புல்லுண்
கலிமாவும் பூட்டிய - நல்லார்
இளநலம்
போலக் கவினி வளமுடையார்
ஆக்கம்போற்
பூத்தன காடு.
விளக்கவுரை :
தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது
23. கண்டிரண் முத்தங் கடுப்பப்
புறவெல்லாந்
தண்டுளி
யாலி புரளப் புயல்கான்று
கொண்டெழில்
வானமுங் கொண்டன் றெவன் கொலோ
ஒண்டொடி
யூடுநிலை.
விளக்கவுரை :
வினைமுற்றிய தலைமகள் நெஞ்சொடு சொல்லியது
24. எல்லா வினையுங் கிடப்ப வெழுநெஞ்சே
கல்லோங்கு
கானங் களிற்றின் மதநாறும்
பல்லிருங்
கூந்தல் பணிநோனாள் கார்வானம்
மெல்லவுந் தோன்றும%
பெயல்.
விளக்கவுரை :
பருவங்கண்டழிந்த தலைமகள் ஆற்றல்வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது
25. கருங்கால் வரகின் பொரிப்போ
லரும்புவிழ்ந்
தீர்ந்தண்
புறவிற் றெறுழிவீ மலர்ந்தன
சேர்ந்தன
செய்குறி வாரா ரவரென்று
கூர்ந்த
பசலை யவட்கு.
விளக்கவுரை :
