கார் நாற்பது 16 - 20 of 40 பாடல்கள்
16. கருங்குயில் கையற மாமயி லாலப்
பெருங்கலி
வான முரறும் - பெருந்தோள்
செயலை யிளந்தளி
ரன்னநின் மேனிப்
பசலை
பழங்கூண் கொள்.
விளக்கவுரை :
17. அறைக்க லிறுவரைமேற் பாம்பு சவட்டிப்
பறைக்குர
லேறோடு பெளவம் பருகி
உறைத்திருள்
கூர்ந்தன்று வானம் பிறைத்தகை
கொண்டன்று
பேதை நுதல்.
விளக்கவுரை :
18. கல்பயில் கானங் கடந்தார் வரவாங்கே
நல்லிசை
யேறொடு வான நடுநிற்பச்
செல்வர்
மனம்போற் கவினீன்ற நல்கூர்ந்தார்
மேனிபோற்
புல்லென்ற காடு.
விளக்கவுரை :
வினைமுற்றிய தலைமகள் பாகற்குச் சொல்லியது
19. நாஞ்சில் வலவ னிறம்போலப் பூஞ்சினைச்
செங்கான்
மராஅந் தகைந்தன - பைங்கோற்
றொடிபொலி
முன்கையாள் தோடுணையா வேண்டி
நெடுவிடைச்
சென்றதென் னெஞ்சு.
விளக்கவுரை :
20. வீறுசால் வேந்தன் வினையு முடிந்தன
ஆறும்
பதமினிய வாயின - ஏறோ
டருமணி
நாக மனுங்கச் செருமன்னர்
சேனைபோற்
செல்லு மழை.
விளக்கவுரை :
