பழமொழி நானூறு 181 - 185 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 181 - 185 of 400 பாடல்கள்

181. பெருமலை நாட! பிறர்அறிய லாகா
அருமறையை ஆன்றோரே காப்பர் - அருமறையை
நெஞ்சிற் சிறியார்க்கு உரைத்தல் 'பனையின்மேல்
பஞ்சிவைத்(து) எஃகிவிட் டற்று'.

விளக்கவுரை :

182. விளிந்தாரே போலப் பிறராகி நிற்கும்
முளிந்தாரைத் தஞ்சம் மொழியலோ வேண்டா
அளிந்தார்கண் ஆயினும் 'ஆராயா னாகித்
தெளிந்தான் விளிந்து விடும்'.

விளக்கவுரை :

20. தெரிந்து தெளிதல்

183. ஆஅம் எனக்கெளி(து) என்றுலகம் ஆண்டவன்
மேஎம் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்
தோஒம் உடைய தொடங்குவார்க்(கு) 'இல்லையே
தாஅம் தரவாரா நோய்'.

விளக்கவுரை :

184. நற்பால சுற்றாரும் நாடாது சொல்லுவர்
இற்பாலர் அல்லார் இயல்பின்மை நோவதென்?
கற்பால் கலங்கருவி நாட! 'மற் றியரானும்
சொற்சோரா தாரோ இல்'.

விளக்கவுரை :

185. பூந்தண் புனற்புகார்ப் பூமிகுறி காண்டற்கு
வேந்தன் வினாயினான் மாந்தரைச் - சான்றவன்
கொண்டதனை நாணி மறைத்தலால் தன் 'கண்ணிற்
கண்டதூஉம் எண்ணிச் சொலல்'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books