பழமொழி நானூறு 176 - 180 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 176 - 180 of 400 பாடல்கள்

176. உழையிருந்து நுண்ணிய கூறிக் கருமம்
புரையிருந்த வாறறியான் புக்கான் விளிதல்
நிரையிருந்து மாண்ட 'அரங்கினுள் வட்டு
கரையிருந் தார்க்கெளிய போர்'.

விளக்கவுரை :

19. மறை பிறர் அறியாமை

177. சுற்றத்தார் நட்டார் எனச்சென்று ஒருவரை
அற்றத்தால் தேறார் அறிவுடையார் - கொற்றப்புள்
ஊர்ந்துலகம் தாவின அண்ணலே யாயினும்
'சீர்ந்தது செய்யாதார் இல்'.

விளக்கவுரை :

178. வெள்ளமாண் பெல்லாம் உடைய தமரிருப்ப
உள்ளமாண் பில்லா ஒருவரைத் தெள்ளி
மறைக்கண் பிரித்தவரை மாற்றா தொழிதல்
'பறைக்கண் கடிப்பிடு மாறு'.

விளக்கவுரை :

179. அன்பறிந்த பின்அல்லால் யார்யார்க்கும் தம்மறையே
முன்பிறர்க்(கு) ஓடி மொழியற்க - தின்குறுவான்
கொல்வாங்குக் கொன்றபின் அல்லது 'உயக்கொண்டு
புல்வாய் வழிப்படுவார் இல்'.

விளக்கவுரை :

180. நயவர நட்டொழுகு வாரும்தாம் கேட்ட(து)
உயவா(து) ஒழிவார் ஒருவரும் இல்லை
புயலமை கூந்தல் பொலந்தொடி! சான்றோர்
'கயவர்க்(கு) உரையார் மறை'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books