பழமொழி நானூறு 171 - 175 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 171 - 175 of 400 பாடல்கள்

171. தெற்ற அறிவுடையார்க்(கு) அல்லால் திறனிலா
முற்றலை நாடிக் கருமம் செயவையார்
கற்றொன் றறிந்து கசடற்ற காலையும்
'மற்றதென் பாற்றேம்பல் நன்று'.

விளக்கவுரை :

172. உற்றான் உறாஅன் எனல்வேண்டா ஒண்பொருளைக்
கற்றானை நோக்கியே கைவிடுக்க - கற்றான்
கிழவனுரை கேட்கும் கேளான் எனினும்
'இழவன்று எருதுண்ட உப்பு'.

விளக்கவுரை :

173. கட்டுடைத் தாகக் கருமம் செயவைப்பின்
பட்டுண்டாங்(கு) ஓடும் பரியாரை வையற்க
தொட்டாரை ஒட்டாப் பொருளில்லை 'இல்லையே
அட்டாரை ஒட்டாக் கலம்'.

விளக்கவுரை :

174. நாட்டிக் கொளப்பட்டார் நன்மை இலராயின்
காட்டிக் களைதும் எனவேண்டா - ஓட்டி
இடம்பட்ட கண்ணாய் ! 'இறக்கும்மை யாட்டை
உடம்படுத்து வெளவுண்டார் இல்'.

விளக்கவுரை :

175. அகந்தூய்மை இல்லாரை ஆற்றப் பெருக்கி
இகந்துழி விட்டிருப்பின் அஃதால் - இகந்து
நினைந்து தெரியானாய் 'நீள்கயத்துள் ஆமை
நனைந்துவா என்று விடல்'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books