பழமொழி நானூறு 166 - 170 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 166 - 170 of 400 பாடல்கள்

166. அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது
நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது
கன்றுவிட்(டு) ஆக்கறக்கும் போழ்தில் கறவானாய்
'அம்புவிட்(டு) ஆக்கறக்கும் ஆறு'.

விளக்கவுரை :

167. மடியை வியங்கொள்ளின் மற்றைக் கருமம்
முடியாத வாறே முயலும் - கொடியன்னாய்!
பாரித் தவனை நலிந்து தொழில்கோடல்
'மூரி உழுது விடல்'.

விளக்கவுரை :

168. ஆணியாக் கொண்ட கருமம் பதிற்றாண்டும்
பாணித்தே செய்ய வியங்கொள்ளின் - காணி
பயவாமல் செய்வாரார் 'தஞ்சாகா டேனும்
உயவாமல் சேறலோ இல்'.

விளக்கவுரை :

169. விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும்
முட்டா தவரை வியங்கொளல் வேண்டுமால்
தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும்
'தட்டாமல் செல்லாது உளி'.

விளக்கவுரை :

170. காட்டிக் கருமம் கயவர்மேல் வைத்தவர்
ஆக்குவர் ஆற்ற எமக்கென்றே அமர்ந்திருத்தல்
மாப்புரை நோக்கின் மயிலன்னாய் ! 'பூசையைக்
காப்பிடுதல் புன்மீன் தலை'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books