பழமொழி நானூறு 161 - 165 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 161 - 165 of 400 பாடல்கள்

161. முடிந்தற்(கு) இல்லை முயற்சி முடியாது
ஒடிந்ததற்(கு) இல்லை பெருக்கம் - வடிந்தற
வல்லதற்(கு) இல்லை வருத்தம் 'உலகினுள்
இல்லதற்(கு) இல்லை பெயர்'.

விளக்கவுரை :

18. கருமம் முடித்தல்

162. செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்
அந்நீர் அவரவர்க்குத் தக்காங்(கு) ஒழுகுபவே
'வெந்நீரின் தண்ணீர் தெளித்து'.

விளக்கவுரை :

163. தாமாற்ற கில்லாதார் தாஞ்சாரப் பட்டாரைத்
தீமாற்றத் தாலே பகைப்படுத்திட்(டு) - ஏமாப்ப
முன்ஓட்டுக் கொண்டு முரண்அஞ்சிப் போவாரே
'உண்ஒட்(டு) அகல்உடைப் பார்'.

விளக்கவுரை :

164. புரையக் கலந்தவர் கண்ணும் கருமம்
உரையின் வழுவா துவப்பவே கொள்க
வரையக நாட! 'விரைவிற் கருமம்
சிதையும் இடராய் விடும்'.

விளக்கவுரை :

165. நிலைஇய பண்பிலார் நேரல்லர் என்றொன்(று)
உளைய உரையார் உறுதியே கொள்க
வளையொலி ஐம்பாலாய் ! வாங்கி இருந்து
'தொளையெண்ணார் அப்பந்தின் பார்'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books