ஐங்குறு நூறு
61 - 65 of 500 பாடல்கள்
7. கிழத்தி கூற்றுப்பத்து
61. நறுவடி மாஅத்து விளைந்துகு தீப்பழம்
நெடுநீர்ப்
பொய்கைத் துடுமென விழூஉம்
கைவண்மத்தி
கழாஅர் அன்ன
நல்லோர்
நல்லோர் நாடி
வதுவை
அயர விரும்புதி நீயே.
விளக்கவுரை :
62. இந்திர விழவின் பூவின் அன்ன
புந்தலைப்
பேடை வரிநிழல் அகவும்
இவ்வூர்
மங்கையர்த் தொகுத்துஇனி
எவ்வூர்
நின்றன்று மகிழ்நநின் தேரே.
விளக்கவுரை :
63. பொய்கைப் பள்ளிப் புலவுநாறு
நீர்நாய்
வாளை
நாளிரை பெறூஉம் ஊர
எம்நலம்
தொலைவ தாயினும்
துன்னலம்
பெருமபிறர்த் தோய்ந்த மார்பே.
விளக்கவுரை :
64. அலமரல் ஆயமோடு அமர்துணை தழீஇ
நலமிகு
புதுப்புனல் ஆடக் கண்டோர்
ஒருவரும்
இருவரும் அல்லர்
பலரே
தெய்யஎம் மறையா தீமே.
விளக்கவுரை :
65. கரும்புநடு பாத்தியில் கலித்த
ஆம்பல்
சுரும்புபசி
களையும் பெரும்புன லூர
புதல்வனை
ஈன்றஎம் மேனி
முயங்கன்மோ
தெய்யநின் மார்புசிதைப் பதுவே.
விளக்கவுரை :