நான்மணிக்கடிகை
61 - 65 of 106 பாடல்கள்
61. இனிதுண்பா னென்பான் உயிர்கொல்லா
துண்பான்
முனிதக்கா
னென்பான் முகன்ஒழிந்து வாழ்வான்
தனிய
னெனப்படுவான் செய்தநன் றில்லான்
இனிய
னெனப்படுவான் யார்யார்க்கே யானும்
முனியா
ஒழுக்கத் தவன்.
விளக்கவுரை :
62. ஈத்துண்பா னென்பான் இசைநடுவான்
மற்றவன்
கைத்துண்பான்
காங்கி யெனப்படுவான் தெற்ற
நகையாகும்
நண்ணார்முன் சேறல் பகையாகும்
பாடறியா
தானை இரவு.
விளக்கவுரை :
63. நெய்விதிர்ப்ப நந்தும் நெருப்பழல்
சேர்ந்து
வழுத்த
வரங்கொடுப்பர் நாகர் - தொழுத்திறந்து
கன்றூட்ட
நந்துங் கறவை கலம்பரப்பி
நன்றூட்ட
நந்தும் விருந்து.
விளக்கவுரை :
64. பழியின்மை மக்களால் காண்க வொருவன்
கெழியின்மை
கேட்டா லறிக பொருளின்
நிகழ்ச்சியா
னாக்க மறிக புகழ்ச்சியால்
போற்றாதார்
போற்றப் படும்.
விளக்கவுரை :
65. கண்ணுள்ளும் காண்புழிக் காதற்றாம்
பெண்ணின்
உருவின்றி
மாண்ட வுளவா - மொருவழி
நாட்டுள்ளும்
நல்ல பதியுள பாட்டுள்ளும்
பாடெய்தும்
பாட லுள.
விளக்கவுரை :