நான்மணிக்கடிகை
56 - 60 of 106 பாடல்கள்
56. யானை யுடையார் கதன்உவப்பர் மன்னர்
கடும்பரிமாக்
காதலித் தூர்வர் - கொடுங்குழை
நல்லாரை
நல்லவர் நாணுவப்பர் அல்லாரை
அல்லார்
உவப்பது கேடு.
விளக்கவுரை :
57. கண்ணிற் சிறந்த உறுப்பில்லை
கொண்டானின்
துன்னிய
கேளிர் பிறரில்லை மக்களின்
ஒண்மையவாய்ச்
சான்ற பொருளில்லை ஈன்றாளோ
டெண்ணக்
கடவுளு மில்.
விளக்கவுரை :
58. கற்றன்னர் கற்றாரைக் காதலர்
கண்ணோடார்
செற்றன்னர்
செற்றாரைச் சேர்ந்தவர் - தெற்றென
உற்ற
துரையாதார் உள்கரந்து பாம்புறையும்
புற்றன்னர்
புல்லறிவி னார்.
விளக்கவுரை :
59. மாண்டவர் மாண்ட வினைபெறுப
வேண்டாதார்
வேண்டா
வினையும் பெறுபவே - யாண்டும்
பிறப்பார்
பிறப்பார் அறனின் புறுவர்
துறப்பார்
துறக்கத் தவர்.
விளக்கவுரை :
60. என்றும் உளவாகும் நாளும் இருசுடரும்
என்றும்
பிணியும் தொழிலொக்கும் - என்றும்
கொடுப்பாரும்
கொள்வாரும் அன்னர் பிறப்பாரும்
சாவாரும்
என்றும் உளர்.
விளக்கவுரை :