கைந்நிலை 6 - 10 of 60 பாடல்கள்
6. மரையா உகளும் மரம்பயில் சோலை
உரைசால்
மடமந்தி ஓடி உகளும்
புரைதீர்
மலைநாடன் பூண்ஏந்து அகலம்
உரையா வழங்குமென் நெஞ்சு.
(துறை : வரைவு நீட்டித்த வழி
ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்)
விளக்கவுரை :
7. கல்வரை ஏறிக் கடுவன் கனிவாழை
எல்உறு
போழ்தின் இனிய பழங்கவுள்கொண்டு
ஒல்என
ஓடு மலைநாடன் தன்கேண்மை
சொல்லச்
சொரியும் வளை.
(துறை : வரைவு நீட்டித்த வழி
ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்)
விளக்கவுரை :
8. கருங்கை கதவேழம் கார்ப்பாம்புக்
குப்பங்
கி............க்...........கொண்..............கரும்
பெருங்கல்
மலைநாடன் பேணி வரினே
சுருங்கும்
இவள்உற்ற நோய்.
(துறை : தலைவி
வேறுபாடு கண்டு வினவிய செவிலிக்குத் தோழி அறத்தோடு நிற்றல்.)
விளக்கவுரை :
9. காந்தள ரும்புகை என்று கதவேழம்
ஏந்தல்
மருப்பிடைக் கைவைத்து இனனோக்கிப்
பாய்ந்தெழுந்து
ஓடும் பயமலை நன்னாடன்
காய்ந்தான்கொல்
நம்கண் கலப்பு.
(துறை : வரைவு நீட்டித்த வழி
ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்)
விளக்கவுரை :
10. பொன்இணர் வேங்கைப் புனஞ்சூழ்
மலைநாடன்
மின்னின்
அனையவேல் ஏந்தி இரவினுள்
இன்னே
வரும்கண்டாய் தோழி இடையாமத்து
என்னை
இமைபொரு மாறு.
(துறை : தலைமகள், இரவுக்குறி
ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்)
விளக்கவுரை :
