கைந்நிலை 11 - 15 of 60
பாடல்கள்
11. எறிகிளர் கேழல் கிளைத்திட்ட பூமி
பொறிகிளர்
மஞ்ஞை புகன்று குடையும்
முறிகிளர்
நன்மலை நாடன் வருமே
அரிதுரைத்திவ்
இல்லில் நமக்கு.
(துறை : தலைமகள், இரவுக்குறி
ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்)
விளக்கவுரை :
12. நாக நறுமலர்நாள் வேங்கைப் பூவிரவிக்
கேசம்
அணிந்த கிளர்எழிலோன் ஆகம்
முடியுங்
கொல் என்றுமுனிவான் ஒருவன்
வடிவேல்கை
ஏந்தி வரும்.
(துறை : தலைமகள், இரவுக்குறி
ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்)
விளக்கவுரை :
2. பாலை
13. கடுகி அதர்அலைக்கும் கல்சூழ்
பதுக்கை
விடுவில்
எயினர்தம் வீளைஓர்த் தோடும்
நெடுவிடை
அத்தம் செலவுரைப்பக் கேட்டே
வடுவிடை
மெல்கின கண்.
(துறை : வரைபொருள்
பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைவனுக்குத் தலைவியின் பிரிவாற்றாமை கூறல்).
விளக்கவுரை :
14. கதநாய் துரப்ப........................................
.....................................................
அவிழும்
புதல்மாறு
வெங்கானம் போக்குரைப்ப நில்லா
முதன்..........................................................
(துறை : வரைபொருள்
பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைவனுக்குத் தலைவியின் பிரிவாற்றாமை கூறல்).
விளக்கவுரை :
15. ...............................................................
....................................................................
கடுங்கதிர்
வெங்கானம் பல்லாருட்கண் சென்றார்
கொடுங்கல்
மலை............................................
(துறை: சென்ற செய்யுளில்
கூறப்பட்டதாக இருக்கலாம்).
விளக்கவுரை :
