கைந்நிலை 1 - 5 of 60 பாடல்கள்
1. குறிஞ்சி
1. நுகர்தல் இவரும் கிளிகடி ஏனல்
நிகரில்
மடமான் எரியும் அமர் சாரல்
கானக
நாடன் கலந்தான் இவன் என்று
மேனி
சிதையும் பசந்து.
(துறை : வரைவு நீட்டித்த வழி
ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்)
விளக்கவுரை :
2. வெந்த புனத்துக்கு வாச முடைத்தாகச்
சந்தனம்
ஏந்தி அருவி கொணர்ந்திடூஉம்
வஞ்ச
மலைநாடன் வாரான்கொல் தோழிஎன்
நெஞ்சம்
நடுங்கி வரும்.
(துறை : வரைவு நீட்டித்த வழி
ஆற்றாமையைத் தலைவி தோழிக்குக் கூறுதல்)
விளக்கவுரை :
3. பாசிப் பசுஞ்சுனைப் பாங்கர் அழிமுதுநீர்
காய்சின
மந்தி பயின்று கனிசுவைக்கும்
பாசம்பட்
டோடும் படுகல் மலைநாடற்கு
ஆசையின்
தேம்பும் என் நெஞ்சு.
(துறை : வரைவு நீட்டித்த வழி
ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்)
விளக்கவுரை :
4. ஓங்கல் விழுப்பலவின் இன்பம் கொளீஇய
தீங்கனி
மாவின் முசுப்பாய் மலைநாடன்
தான்கலந்து
உள்ளாத் தகையானோ நேரிழாய்
தேங்கலந்த
சொல்லின் தெளித்து.
(துறை : வரைவு நீட்டித்த வழி
ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்)
விளக்கவுரை :
5. இரசங்கொண்டு இன்தேன் இரைக்கும்
குரலைப்
பிரசை
இரும்பிடி பேணி வரூஉம்
முரசருவி
ஆர்க்கும் மலைநாடற்கு என்தோள்
நிரையம்எனக்
கிடந்த வாறு.
(துறை : வரைவு நீட்டித்த வழி
ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்)
விளக்கவுரை :
