கைந்நிலை 51 - 55 of 60 பாடல்கள்
51. மணிநிற நெய்தல் மலர்புரையும்
கண்ணாய்
அணிநல
முண்டிறந்து ...ம்மருளோ விட்ட
துணிமுந்
நீர்ச் சேர்ப்பற்குத் தூதொடு வந்த
பணிமொழிப்
புள்ளே பற.
விளக்கவுரை :
52. அன்னையும் இல்கடிந்தாள்
யாங்குஇனியாம் என்செய்கம்
புன்னையங்
கானலுள் புக்கருந்தும் - நின்னை
நினையான்
துறந்த நெடுங்கழிச் சேர்ப்பற்கு
உரையேனோ
பட்ட பழி.
விளக்கவுரை :
53. அலவன் வழங்கும் அடும்பிமிர் எக்கர்
நிலவு
நெடுங்கானல் நீடார் துறந்தார்
புலவுமீன்
குப்பை கவரும் துறைவன்
கலவான்கொல்
தோழி நமக்கு.
(துறை : வரைபொருட் பிரிவு நீட்டித்த
வழித் தலைவி தோழிக்குக் கூறியது).
விளக்கவுரை :
54. என்னையர் தந்த இறவுணங்கல்
யாம்கடிந்து
புன்னையங்
கானல் இருந்தேமாப் பொய்த்தெம்மைச்
சொன்னலம்
கூறி நலனுண்ட சேர்ப்பனை
என்னைகொல்
யாம்காணு மாறு.
(துறை : வரைபொருட் பிரிவு நீட்டித்த
வழித் தலைவி தோழிக்குக் கூறியது).
விளக்கவுரை :
55. கொக்கார் கொடுங்கழிக் கூடுநீர்த்
தண்சேர்ப்பன்
நக்காங்கு
அசதி தனியாடித் - தக்க
பொருகயல்
கண்ணினாய் புல்லான் விடினே
இருகையும்
நில்லா வளை.
(துறை : பாங்கி தலைவன்
இயற்பழித்துழித் தலைவி இயற்பட மொழிந்தது).
விளக்கவுரை :
