கைந்நிலை 46 - 50 of 60
பாடல்கள்
46. கயநீர்ப் பாய்ந்தோடும் காஞ்சிநல்
ஊரன்
நயமே
பலசொல்லி நாணினன் போன்றான்
பயமில்
யாழ்ப்பாண பழுதாய கூறாது
எழுநீபோ
நீடாது மற்று.
(துறை : வாயிலாக வந்த பாணனுக்குத்
தலைவி வாயில் மறுத்தது.)
விளக்கவுரை :
47. அரக்காம்பல் தாமரை அம்செங் கழுநீர்
ஒருக்கார்ந்த
வல்லி ஒலித்தாரக் குத்துஞ்
செருக்கார்
வளவயல்ஊரன் பொய்ப் பாண
இருக்கஎம்
இல்லுள் வாரல்.
(துறை : வாயிலாக வந்த பாணனுக்குத்
தலைவி வாயில் மறுத்தது.)
விளக்கவுரை :
48. கொக்கார் வளவயல்ஊரன் குளிர் சாந்தம்
மிக்க
வனமுலை புல்லான் பொலிவுடைத்தா
தக்கயாழ்ப்
பாணதளர் முலையாய் மூத்தமைந்தார்
உத்தரம்
வேண்டா வரல்.
(துறை : வாயிலாக வந்த பாணனுக்குத்
தலைவி வாயில் மறுத்தது.)
விளக்கவுரை :
5.பாலை
49. நாவாய் வழங்கு நனிதிரைத் தண்கடலுள்
ஓவா
கலந்தார்க்கு ஒல்லென் இறாக்குப்பைப்
பாவாரம்
சேர்ப்பதற்கு உரையாய் பரியாது
நோயான்
நுணுகிய வாறு.
விளக்கவுரை :
50. நெடுங்கடல் சேர்ப்ப நின்னோடு உரையேன்
ஒடுங்கு
மடற்பெண்ணை அன்றிற்கும் சொல்லேன்
கடுஞ்சூளில்
தான்கண்டு கானலுள் மேயும்
தடந்தாள்
மடநாராய் கேள்.
விளக்கவுரை :
