கைந்நிலை 41 - 45 of 60
பாடல்கள்
41. பொய்கைநல் லூரன் திறன்கிளப்ப
என்னுடையை?
அஃதன்று
எனினும் அறிந்தோம்யாம் - செய்தி
நெறியின்
இனியசொல் நீர்வாய் மழலைச்
சிறுவன்
எனக்குடைமை யால்.
(துறை : வாயிலாக வந்த பாணனுக்குத்
தலைவி வாயில் மறுத்தது.)
விளக்கவுரை :
42. நீத்தம் நீர்ஊரன் நிலைமையும்
வண்ணமும்
யார்க்கு
ரைத்திபாண? அதனால்யாம் என்செய்தும்?
கூத்தனாக்
கொண்டு குறைநீர் உடையையேல்
ஆட்டுவித்து
உண்ணினும் உண்.
(துறை : வாயிலாக வந்த பாணனுக்குத்
தலைவி வாயில் மறுத்தது.)
விளக்கவுரை :
43. போதவிழ் தாமரைப் பூந்துறை ஊரனைத்
தாதவிழ்
கோதைத் தகையிலார் தாம்புலப்பர்
ஏதின்மை
சொல்லி இருப்பர் பிறர்மகளிர்
பேதமை
தம்மேலே கொண்டு.
(துறை : வாயிலாக வந்த பாணனுக்குத்
தலைவி வாயில் மறுத்தது.)
விளக்கவுரை :
44. தன்துறை ஊரன் தடமென் பணைத்தோளாய்
வண்டூது
கோதை வகைநாடிக் - கொண்டிருந்து
கோல
வனமுலையும் புல்லினான் என்றெடுத்துச்
சாலவும்
தூற்றும் அலர்.
(துறை : வாயிலாக வந்த தோழிக்குத்
தலைவி வாயில் மறுத்தது.)
விளக்கவுரை :
45. மூத்தேம் இனிப்பாண முன்னாயின்
நாம்இளையேம்
கார்த்தண்
கலிவயல் ஊரான் கடிதுஎமக்குப்
பாத்தில்
பயமொழி பண்பு பலகூறி
நீத்தல்
அறிந்திலேம் இன்று.
(துறை : வாயிலாக வந்த பாணனுக்குத்
தலைவி வாயில் மறுத்தது.)
விளக்கவுரை :
