கைந்நிலை 36 - 40 of 60
பாடல்கள்
36. பிடவங் குருந்தொடு பிண்டி மலர
மடவமயில்
கூவ மந்திமா கூரத்
தடமலர்க்
கோதையாய் தங்கார் வருவர்
இடபமெனக்
கொண்டு தாம்.
(துறை : தோழி பருவம் காட்டி தலைவர்
வருவார் என வற்புறுத்தி ஆற்றுவித்தல்).
விளக்கவுரை :
4. மருதம்
37. கழனி உழவர் கலிஅஞ்சி ஓடித்
தழென
மதஎருமை தண்கயம் பாயும்
பழன
வயலூரன் பாணஎம் முன்னர்ப்
பொழெனப்
பொய்கூறா தொழி.
(துறை : பரத்தையிற் பிரிந்த தலைவன்
பாணனை வாயிலாக விடுக்கத் தலைவி பாணனை நோக்கிக்
கூறியது).
விளக்கவுரை :
38. கயலினம் பாயும் கழனி நல்லூர
நயமிலேன்
எம்மனை இன்றொடு வாரல்
துயிலின்
இளமுலையார் தோள்நயந்து வாழ்கின்
குயி...................................... கொண்டு.
(துறை : பரத்தையர் சேரியில் பயின்று
வந்த தலைவனைப் பிரிந்து தலைவி கூறியது).
விளக்கவுரை :
39. முட்ட முதுநீர் அடைகரை
மேய்ந்தெழுந்து
தொட்ட
வரிவரால் பாயும் புனல்ஊரன்
கட்டலர்
கண்ணிப் புதல்வனைக் கொண்டுஎம்மில்
சுட்டி
அலைய வரும்.
(துறை : தலைவன் மகற்கொண்டு வரும்
சிறப்பினைத் தோழி கண்டு மகிழ்ந்து கூறியது).
விளக்கவுரை :
40. தாரா இரியும் தகைவயல் ஊரனை
வாரான்
எனினும் வரும்என்று - சேரி
புலப்படும்
சொல்லும் இப்பூங்கொடி அன்னார்
கலப்படும்
கூடுங்கொல் மற்று.
(துறை : வாயிலாக வந்த பாணனுக்குத்
தோழி தலைவியின் பண்பு கூறி வாயில் மறுத்தது.)
விளக்கவுரை :
