திணை மொழி ஐம்பது 46 - 50 of 50 பாடல்கள்
46. முருகியல் கானல் அகன்கரை யாங்கண்
குருதினம் ஆர்க்கும் கொடுங்கழிச்
சேர்ப்ப
மருவி வரலுற வேண்டும்என் தோழி
உருவழி உன்நோய் கெட.
விளக்கவுரை :
47. அணிபூங் கழிக்கானல் அற்றைநாள் போலான
மணியெழில் மேனி மலர்பசப்(பு) ஊரத்
துணிகடல் சேர்ப்பன் துறந்தான்கொல்
தோழி!
தணியும்எள் மென்தோள் வளை.
விளக்கவுரை :
48. கறங்கு மணிநெடுந்தேர் கண்வாள் அறுப்பப்
பிறங்கு மணல்மேல் அலவன் பரப்ப
வறங்கூர் கடுங்கதிர் வல்விரைந்து
நீங்க
நிறங்கூரும் மாலை வரும்.
விளக்கவுரை :
49. மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள்
பயில்வதோர் தெய்வம்கொல் கேளீர்!
குயில்பயிரும்
கன்னி இளஞாழல் பூம்பொழில் நோக்கிய
கண்ணின் வருந்தும்என் நெஞ்சு.
விளக்கவுரை :
50. பவளமும் முத்தும் பளிங்கும் விரைஇப்
புகழக் கொணர்ந்து புற(வு) அடுக்கும்
முன்றில்
தவழ்திரைச் சேர்ப்பன் வருவான்கொல்
தோழி
திகழும் திருஅமர் மார்பு.
விளக்கவுரை :
திணை மொழி ஐம்பது முற்றிற்று
