திணை மொழி ஐம்பது 41 - 45 of 50 பாடல்கள்
5. நெய்தல்
41. நெய்தல் படப்பை நிறைகழித் தண்சேர்ப்பன்
கைதைசூழ் கானலுள் கண்டநாள் போலானான்
செய்த குறியும்பொய் யாயின
ஆயிழையாய்!
ஐயகொல் ஆன்றார் தொடர்பு.
விளக்கவுரை :
42. முத்தம் அரும்பும் முடத்தாள் முதுபுன்னை
தத்தும் திரைதயங்கும் தண்ணங்
கடற்சேர்ப்ப!
சித்திரப் பூங்கொடி அன்னாட்(கு)
அருள்ஈயாய்
வித்தகப் பைம்பூணின் மார்பு.
விளக்கவுரை :
43. எறிசுறா நீள்கடல் ஓதம் உலாவ
நெறியிறாக் கொட்கும் நிமிர்கழிச்
சேர்ப்பன்
அறிவுஅறா இன்சொல் அணியிழையாய்!
நின்னில்
செறிவுஅறா செய்த குறி.
விளக்கவுரை :
44. இளமீன் இருங்கழி ஓதம் உலாவ
மணிநீர் பரக்கும் துறைவ! தகுமோ
குணநீர்மை குன்றாக் கொடியன்னாள்
பக்கம்
நினைநீர்மை இல்லா ஒழிவு.
விளக்கவுரை :
45. கடல்கொழித்(து) ஈட்ட கதிர்மணி முத்தம்
படமணி அல்குல் பரதர் மகளிர்
தொடலைசேர்த்(து) ஆடும் துறைவ!
என்தோழி!
உடலுள் உறுநோய் உரைத்து.
விளக்கவுரை :
