திரிகடுகம் 46 - 50 of 100 பாடல்கள்


திரிகடுகம் 46 - 50 of 100 பாடல்கள்

அறிவுடையார் குறுகாதவை.

46. கால்தூய்மை யில்லாக் கலிமாவும் காழ்கடிந்து
மேல்தூய்மை யில்லாத வெங்களிறும் - சீறிக்
கறுவி வெகுண்டுரைப்பான் பள்ளிஇம் மூன்றும்
குறுகார் அறிவுடை யார்.

விளக்கவுரை :

காக்கப்பட வேண்டியவை

47. சில்சொற் பெருந்தோள் மகளிரும் பல்வகையும்
தாளினால் தந்த விழுநிதியும் - நாடோறும்
நாத்தளிர்ப்ப ஆக்கிய உண்டியும் இம்மூன்றும்
காப்பிகழ் ஆகாப் பொருள்.

விளக்கவுரை :

மெய்ப்பொருள் உணர்ந்தவர்

48. வைதலை இன்சொல்லாக் கொள்வானும் நெய்பெய்த
சோறென்று கூழை மதிப்பானும் - ஊறிய
கைப்பதனைக் கட்டியேன்று உண்பானும் இம்மூவர்
மெய்ப்பொருள் கண்டுவாழ் வார்.

விளக்கவுரை :

எவருக்கும் பயனற்றவர்

49. ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது
வைதெள்ளிச் சொல்லும் தலைமகனும் - பொய்தெள்ளி
அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர்
இம்மைக்கு உறுதியில் லார்.

விளக்கவுரை :

மழையைக் குறைப்பவர்

50. கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும்
உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும்
இல்லிருந்து எல்லை கடப்பாளும் இம்மூவர்
வல்லே மழையறுக்கும் கோள்.

விளக்கவுரை :

திரிகடுகம், நல்லாதனார், thirikadugam, nallathanaar, tamil books