திரிகடுகம்
41 - 45 of 100 பாடல்கள்
அறங்களுள் சிறந்தவை
41. அலந்தார்க்கொன்று ஈந்த புகழும்
துளங்கினும்
தன்குடிமை
குன்றாத் தகைமையும் - அன்போடி
நாள்நாளும்
நட்டார்ப் பெருக்கலும் இம்மூன்றும்
கேள்வியுள்
எல்லாந் தலை.
விளக்கவுரை :
வேளாண்குடிக்கு அழகாவன
42. கழகத்தால் வந்த பொருள்கா முறாமை
பழகினும்
பார்ப்பாரைத் தீப்போல் - ஒழுகல்
உழவின்கண்
காமுற்று வாழ்தல் இம்மூன்றும்
அழகென்ப
வேளாண் குடிக்கு.
விளக்கவுரை :
வஞ்சத்தின் பொருள்
43. வாயின் அடங்குதல் துப்புரவாம்
மாசற்ற
செய்கை
அடங்குதல் திப்பியமாம் - பொய்யின்றி
நெஞ்சம்
அடங்குதல் வீடாகும் இம்மூன்றும்
வஞ்சத்தின்
தீர்ந்த பொருள்.
விளக்கவுரை :
அறிவுடையார்க்கு நோய் ஆவன
44. விருந்தின்றி உண்ட பகலும்
திருந்திழையார்
புல்லப்புடை
பெயராக் கங்குலும் - இல்லார்க்கொன்று
ஈயா
தொழிந்தகன்ற காலையும் இம்மூன்றும்
நோயே
உரனுடை யார்க்கு.
விளக்கவுரை :
நரகத்தில் விழுபவர்
45. ஆற்றானை ஆற்றென் றலைப்பானும்
அன்பின்றி
ஏற்றார்க்கு
இயைவ கரப்பானும் - கூற்றம்
வரவுண்மை
சிந்தியா தானுமிம் மூவர்
நிரயத்துச்
சென்றுவீழ் வார்.
விளக்கவுரை :
