திரிகடுகம்
36 - 40 of 100 பாடல்கள்
நூல்களின் உண்மை உணராதவர்
36. ஊனுண் டுயிர்கட் கருளுடையேம்
என்பானும்
தானுடன்பா
டின்றி வினையாக்கும் மென்பானும்
காமுறு
வேள்வியில் கொல்வானும் இம்மூவர்
தாமறிவர்
தாங்கண்ட வாறு.
விளக்கவுரை :
வாய்மையாளர் வழக்கம்
37. குறளையுள் நட்பளவு தோன்றும் உறலினிய
சால்பினில்
தோன்றும் குடிமையும் - பால்போலும்
தூய்மையுள்
தோன்றும் பிரமாணம் இம்மூன்றும்
வாய்மை
யடையார் வழக்கு.
விளக்கவுரை :
செல்வம் உடைக்கும் படை
38. தன்னை வியந்து தருக்கலும்
தாழ்வின்றிக்
கொன்னே
வெகுளி பெருக்கலும் - முன்னிய
பல்பொருள்
வெஃகும் சிறுமையும் இம்மூன்றும்
செல்வம்
உடைக்கும் படை.
விளக்கவுரை :
அறம் அற்றவரின் செயல்கள்
39. புலைமயக்கம் வேண்டிப்
பொருட்பெண்டிர்த் தோய்தல்
கலமயக்கம்
கள்ளுண்டு வாழ்தல் - சொலைமுனிந்து
பொய்ம்மயக்கம்
சூதின் கண்தாங்கால் இம்மூன்றும்
நன்மையி
லாளர் தொழில்.
விளக்கவுரை :
தொல்லறிவாளர் தொழில்கள்
40. வெகுளி நுணுக்கும் விறலு மகளிர்கட்கு
ஒத்த
லொழுக்கம் உடைமையும் - பாத்துண்ணும்
நல்லறி
வாண்மை தலைப்படலும் இம்மூன்றும்
தொல்லறி
வாளர் தொழில்.
விளக்கவுரை :
