திரிகடுகம் 31 - 35 of 100 பாடல்கள்


திரிகடுகம் 31 - 35 of 100 பாடல்கள்

தலை சிறந்தவை

31. பல்லவையுள் நல்லவை கற்றலும் பாத்துண்டாம்
இல்லற முட்டாது இயற்றலும் - வல்லிதின்
தாளி னொருபொரு ளாக்கலும் இம்மூன்றும்
கேள்வியுள் எல்லாம் தலை.

விளக்கவுரை :

கற்றவர் கடமை

32. நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலும் நூற்குஏலா
வெண்மொழி வேண்டினும் சொல்லாமை - நன்மொழியைச்
சிற்றினம் அல்லார்கண் சொல்லலும் இம்மூன்றும்
கற்றறிந்தார் பூண்ட கடன்.

விளக்கவுரை :

மன்னன் கைவிடலாகாதவை

33. கோலஞ்சி வாழும் குடியும் குடிதழீஇ
ஆலம்வீழ் போலும் அமைச்சனும் - வேலின்
கடைமணிபோல் திண்ணியான் காப்பும் இம்மூன்றும்
படைவேந்தன் மற்று விடல்.

விளக்கவுரை :

உலகம் எனப்படுவார்

34. மூன்று கடன்கழித்த பார்ப்பானும் ஓர்ந்து
முறைநிலை கோடா அரசும் - சிறைநின்று
அலவலை இல்லாக் குடியும் இம்மூவர்
உலகம் எனப்படு வார்.

விளக்கவுரை :

முக்தியுலகை அடைபவர்

35. முந்நீர்த் திரையின் எழுந்தியங்கா மேதையும்
நுண்ணூற் பெருங்கேள்வி நூற்கரை கண்டானும்
மைந்நீர்மை இன்றி மயலுறுப்பான் இம்மூவர்
மெய்ந்நீர்மை மேல் நிற்பவர்.

விளக்கவுரை :

திரிகடுகம், நல்லாதனார், thirikadugam, nallathanaar, tamil books