திரிகடுகம் 26 - 30 of 100 பாடல்கள்


திரிகடுகம் 26 - 30 of 100 பாடல்கள்

உயர்ந்தவர் எனப்படுபவர்

26. ஒல்வ தறியும் விருந்தினனும் ஆருயிரைக்
கொல்வ திடைநீக்கி வாழ்வானும் - வல்லிதின்
சீலமினி துடைய ஆசானும் இம்மூவர்
ஞாலம் எனப்படு வார்.

விளக்கவுரை :

தூயவரின் செயல்கள்

27. உண்பொழுது நீராடி உண்டலும் என்பெறினும்
பால்பற்றிச் சொல்லா விடுதலும் - தோல்வற்றிச்
சாயினுஞ் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றும்
தூஉய மென்பார் தொழில்.

விளக்கவுரை :

உமி குத்திக் கை வருந்துவார்

28. வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கு நோன்பிலியும்
இல்லது காமுற்று இருப்பானும் - கல்வி
செவிக்குற்றம் பார்த்திருப்பானும் இம்மூன்றும்
உமிக்குத்திக் கைவருந்துவார்.

விளக்கவுரை :

கற்றவர் கருத்து.

29. பெண்விழைந்து பின்செலினும் தன்செலவிற் குன்றாமை
கண்விழைந்து கையுறினும் காதல் பொருட்கின்மை
மண்விழுந்து வாழ்நாள் மதியாமை இம்மூன்றும்
நுண்விழைந்த நூலவர் நோக்கு.

விளக்கவுரை :

நிலைத்த புகழை உடையவர்

30. தன்நச்சிச் சென்றாரை எள்ளா வொருவனும்
மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும்
என்றும் அழுக்காறி கந்தானும் இம்மூவர்
நின்ற புகழுடை யார்.

விளக்கவுரை :

திரிகடுகம், நல்லாதனார், thirikadugam, nallathanaar, tamil books