திரிகடுகம் 21 - 25 of 100 பாடல்கள்


திரிகடுகம் 21 - 25 of 100 பாடல்கள்

நல்லவரின் கொள்கைகள்

21. வருவாயுள் கால்வழங்கி வாழ்தல் செருவாய்ப்பச்
செய்தவை நாடாச் சிறப்புடைமை - எய்தப்
பலநாடி நல்லவை கற்றல் இம்மூன்றும்
நலமாட்சி நல்லவர் கோள்.

விளக்கவுரை :

வீடு அடையலாம்

22. பற்றென்னும் பாசத் தளையும் பலவழியும்
பற்றறா தோடும் அவாத்தேரும் - தெற்றெனப்
பொய்த்துரை யென்னும் பகையிருளும் இம்மூன்றும்
வித்தற வீடும் பிறப்பு.

விளக்கவுரை :

அறப்பயனைக் கட்டும் கயிறு

23. தானம் கொடுக்கும் தகைமையும் மானத்தார்
குற்றம் கடிந்த ஒழுக்கமும் - தெற்றெனப்
பல்பொருள் நீங்கிய சிந்தையும் இம்மூன்றும்
நல்வினை யார்க்கும் கயிறு.

விளக்கவுரை :

நரகத்தைப் போன்றவை

24. காண்டகு மென்றோள் கணிகைவா யின்சொல்லும்
தூண்டிலின் உட்பொதிந்த தேரையும் - மாண்டசீர்க்
காழ்த்த பகைவர் வணக்கமும் இம்மூன்றும்
ஆழ்ச்சிப் படுக்கும் அளறு.

விளக்கவுரை :

அறிஞர் கொள்ளாத உணவுகள்

25. செருக்கினால் வாழும் சிறியவனும் பைத்தகன்ற
அல்குல் விலைபகரும் ஆய்தொடியும் - நல்லவர்க்கு
வைத்த அறப்புறம் கொன்றானும் இம்மூவர்
கைத்துண்ணார் கற்றறிந் தார்.

விளக்கவுரை :

திரிகடுகம், நல்லாதனார், thirikadugam, nallathanaar, tamil books