ஐங்குறு நூறு
41 - 45 of 500 பாடல்கள்
5. புலவிப் பத்து
41. தன்பார்ப்புத் தின்னும் அன்புஇல்
முதலையொடு
வெண்பூம்
பொய்கைத்து அவனூர்என்ப அதனால்
தன்சொல்
உணர்ந்தோர் மேனி
பொன்போல்
செய்யும் ஊர்கிழ வோனே.
விளக்கவுரை :
42. மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள் கொலோ
யாணர்
ஊரநின் மானிழை யரிவை
காவிரி
மலிர்நிறை யன்னநின்
மார்புநனி
விலக்கல் தொடங்கி யோளே.
விளக்கவுரை :
43. அம்பணத் தன்ன யாமை யேறிச்
செம்பின்
அன்ன பார்ப்புப் பலதுஞ்சும்
யாணர்
ஊர நின்னினும்
பாணன்
பொய்யன் பல்சூ ளினனே.
விளக்கவுரை :
44. தீம்பெரும் பொய்கை யாமை
இளம்பார்ப்புத்
தாய்முகம்
நோக்கி வளர்ந்திசின் ஆஅங்கு
அதுவே
ஐயநின் மார்பே
அறிந்தனை
ஒழுகுமதி அறனுமார் அதுவே.
விளக்கவுரை :
45. கூதிர் ஆயின் தன்கலிழ் தந்து
வேனில்
ஆயின் மணிநிறங் கொள்ளும்
யாறுஅணிந்
தன்றுநின் ஊரே
பச்ப்பணிந்
தனவால் மகிழ்நஎன் கண்ணே.
விளக்கவுரை :