பழமொழி நானூறு 41 - 45 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 41 - 45 of 400 பாடல்கள்

41. உரிஞ்சி நடப்பாரை உள்ளடி நோவா
நெருஞ்சியும் செய்வதொன் றில்லை - செருந்தி
இருங்கழித் தாழும் எறிகடல் தண்சேர்ப்ப !
'பெரும்பழியும் பேணாதார்க்(கு) இல்'.

விளக்கவுரை :

42. ஆவிற்கு அரும்பனி தாங்கிய மாலையும்
கோவிற்குக் கோவலன் என்றுலகம் கூறுமால்
தேவர்க்கு மக்கட்(கு) எனல்வேண்டா 'தீங்குரைக்கும்
நாவிற்கு நல்குரவு இல்'.

விளக்கவுரை :

6. இன்னா செய்யாமை

43. பூவுட்கும் கண்ணாய் ! பொறுப்பர் எனக்கருதி
யாவர்க்கே யாயினும் இன்னா செயல்வேண்டா
தேவர்க்கும் கைகூடத் திண்ணன்பி னார்க்கேயும்
'நோவச்செய் நோயின்மை இல்'.

விளக்கவுரை :

44. வினைப்பயன் ஒன்றின்றி வேற்றுமை கொண்டு
நினைத்துப் பிறர்பனிப்ப செய்யாமை வேண்டும்
புனம்பொன் அவிர்சுணங்கி பூங்கொம்பர் அன்னாய்!
'தனக்கின்னா இன்ன பிறர்க்கு'.

விளக்கவுரை :

45. ஆற்றார் இவரென்(று) அடைந்த தமரையும்
தோற்றத்தாம் எள்ளி நலியற்க - போற்றான்
'கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும்
உடையானைக் கவ்வி விடும்.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books