பழமொழி நானூறு 396 - 400 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 396 - 400 of 400 பாடல்கள்

396. எனைப்பல் பிறப்பினும் ஈண்டித்தாம் கொண்ட
வினைப்பயன் மெய்யுறுதல் அஞ்சி - எனைத்தும்
கழிப்புழி ஆற்றாமை காண்டும் அதுவே
'குழிப்புழி ஆற்றா குழிக்கு'.

விளக்கவுரை :

397. திரியும் இடிஞ்சிலும் நெய்யும் சார்வாக
எரியும் சுடரே ரனைத்தாய்த் - தெரியுங்கால்
சார்வற ஓடிப் பிறப்பறுக்கும் அஃதேபோல்
'நீரற நீர்ச்சார் வறும்'.

விளக்கவுரை :

398. ஓதநீர் வேலி உலகத்தார் அந்நெறி
காதலர் என்பது அறிந்தலால் - யாதொன்றும்
கானக நாட ! பயிலார் 'பயின்றது
வானகம் ஆகி விடும்.

விளக்கவுரை :

399. பரந்தவர் கொள்கைமேல் பல்லாறும் ஓடார்
நிரம்பிய காட்சி நினைந்தறிந்து கொள்க
வரம்பில் பெருமை தருமே 'பரம்பூரி
என்றும் பதக்கே வரும்'

விளக்கவுரை :

(குறிப்பு : தற்சிறப்புப் பாயிரமும் கடவுள் வணக்கமும் சேர்த்து மொத்தம் 401 பாடல்கள்).

பழமொழி நானூறு முற்றிற்று

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books