பழமொழி நானூறு 31 - 35 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 31 - 35 of 400 பாடல்கள்

31. பொற்பவும் பொல்லா தனவும் புனைந்திருந்தார்
சொற்பெய்து உணர்த்துதல் வேண்டுமோ? - விற்கீழ்
அரிபாய் பரந்தகன்ற கண்ணாய்! - 'அறியும்
பெரிதாள் பவனே பெரிது'.

விளக்கவுரை :

32. பரந்த திறலாரைப் பாசிமேல் இட்டுக்
கரந்து மறைக்கலும் ஆமோ? - நிரந்தெழுந்து
வேயின் திரண்டதோள் வேற்கண்ணாய் 'விண்ணியங்கும்
ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல்'.

விளக்கவுரை :

33. அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும்
திருவுடைய ராயின் திரிந்தும் - வருமால்
பெருவரை நாட! பிரிவின் றதனால்
'திருவினும் திட்பம் பெறும்'.

விளக்கவுரை :

5. ஒழுக்கம்

34. விழுத்தொடையர் ஆகி விளங்கித்தொல் வந்தார்
ஒழுக்குடையர் ஆகி ஒழுகல் -பழத்தெங்கு
செய்த்தலை வீழும் புனலூர ! அஃதன்றோ
'நெய்த்தலைப்பால் உக்கு விடல்'

விளக்கவுரை :

35. கள்ளி அகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்
எள்ளற்க யார்வாயின் நல்லுரையைத் தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலைநாட ! 'நாய்கொண்டால்
பார்ப்பாரும் தின்பர் உடும்பு'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books