பழமொழி நானூறு
26 - 30 of 400 பாடல்கள்
4. அறிவுடைமை
26. அறிவினால் மாட்சியொன்(று) இல்லா
ஒருவன்
பிறிதினால்
மாண்டது எவனாம் - பொறியின்
மணிபொன்னும்
சாந்தமும் மாலையும் இன்ன
'அணியெல்லாம் ஆடையின் பின்'.
விளக்கவுரை :
27. ஆயிரவ ரானும் அறிவிலார் தொக்கக்கால்
மாயிரு
ஞாலத்து மாண்பொருவன் போல்கலார்
பாயிருள்
நீக்கும் 'மதியம்போல் பன்மீனும்
காய்கலா
வாகும் நிலா'.
விளக்கவுரை :
28. நற்கறிவு இல்லாரை நாட்டவும்
மாட்டாதே
சொற்குறி
கொண்டு துடிபண் உறுத்துவபோல்
வெற்பறைமேல்
தாழும் இலங்கருவி நன்னாட!
'கற்றறிவு போகா கடை'.
விளக்கவுரை :
29. ஆணம் உடைய அறிவினார் தந்நலம்
மானும்
அறிவி னவரைத் தலைப்படுத்தல்
மானமர்
கண்ணாய்! மறங்கெழு மாமன்னர்
'யானையால் யானையாத் தற்று'.
விளக்கவுரை :
30. தெரிவுடையா ரோடு தெரிந்துணர்ந்து
நின்றார்
பரியார்
இடைப்புகார் பண்பறிவார் மன்ற
விரியா
இமிழ்திரை வீங்குநீர்ச் சேர்ப்ப!
'அரிவாரைக் காட்டார் நரி'.
விளக்கவுரை :