கைந்நிலை 21 - 25 of 60
பாடல்கள்
21. ஆந்தை குறுங்கலி கொள்ளநம் ஆடவர்
காய்ந்து
கதிர்தெறூஉம் கானம் கடந்தார்பின்
ஏந்தல்
இளமுலை ஈர்எயிற்றாய் என்நெஞ்சு
நீந்து
நெடுவிடைச் சென்று.
(துறை : பிரிவாற்றாத தலைவி தன்
தோழிக்குக் கூறியது).
விளக்கவுரை :
22. கள்வர் திரிதரூஉம் கானம் கடந்தவர்
உள்ளம்
பிரிந்தமை நீஅறிதி - ஒள்இழாய்
தொல்லை
விடரகம் நீந்திப் பெயர்ந்தவர்
வல்லைநாம்
காணும் வரவு.
(துறை : பிரிவிடை வேறுபட்ட தலைவியைத்
தோழி வற்புறுத்தித் தேற்றியது.)
விளக்கவுரை :
23. சிலையொலி வெங்கணையார் சிந்தியா
நெஞ்சில்
கொலைபுரி
வில்லொடு கூற்றுபோல் ஓடும்
இலையொலி
வெங்கானத்து இப்பருவம் சென்றார்
தொலைவிலர்கொல்
தோழி நமர்.
(துறை : ஆற்றாமையறிந்து வருந்திய
தோழிக்குத் தலைவி ஆற்றுவல் என்பது தோன்றக் கூறியது).
விளக்கவுரை :
24. வெஞ்சுரம் தேரோட வெஃகிநின்று
அத்தமாச்
சிந்தையான்
நீர்என்று செத்துத் தவாஓடும்
பண்பில்
அருஞ்சுரம் என்பவால் ஆய்தொடி
நண்பிலார்
சென்ற நெறி.
(துறை : ஆற்றாமையறிந்து வருந்திய
தோழிக்குத் தலைவி ஆற்றுவல் என்பது தோன்றக் கூறியது).
விளக்கவுரை :
3. முல்லை
25. கார்செய் புறவில் கவினிக்
கொடிமுல்லை
கூர்எயிறு
ஈனக் குருத்தரும்ப - ஓரும்
வருவர்நம்
காதலர் வாள்தடங் கண்ணாய்
பருவரல்
பைதல்நோய் கொண்டு.
(துறை : பிரிவாற்றாமையால் வருந்திய
தலைவிக்குக் கார்ப்பருவம் காட்டி வருவர் எனத்
தோழி வற்புறுத்தியது).
விளக்கவுரை :
