இன்னிலை 21 - 25 of 45 பாடல்கள்
21. துணையென்ப காம விருந்துய்ப்பார் தோமில்
இணைவிழைச்சின் மிக்காதார் ஆகல் -
புணைதழீஇக்
கூட்டுங் கடுமிகையான் கட்டியில்
கொண்டற்றால்
வேட்டபோழ்(து) ஆகும் அணி.
விளக்கவுரை :
22. ஒப்பாவில் வேட்டோன் ஒருநிலைப்பட்(டு) ஆழ்ந்தசெயல்
நப்பின்னை ஞாலம் ஒருங்கறிய
-துப்பாராய்த்
தூமலரின் மென்மையுறு தோற்றத்தே
வைத்துய்க்க
ஏமக் கிழத்தி யறிந்து.
விளக்கவுரை :
23. பாலை வளர்த்துக் கணங்குழை மாலையுறல்
சால்பென்ப கண்கூடாக் காணாய் -
தழைகாதல்
வாலறிவன் ஆக்க வகையறிக காலத்தால்
தோலொடு நாலைந்(து) அணைந்து.
விளக்கவுரை :
24. அழக்குடம்பு யாத்தசீர் மெல்லியவை ஆணம்
முழுக்காட்டி மன்றின்முன் கைத்தாக்
- குழீஇக்கூடல்
என்னே செறிகாமம் பூட்டும் இயல்மாரன்
மனஅரசால் மாண்பூப்(பு) உலகு.
விளக்கவுரை :
25. இன்ப இயல்ஓரார் யாணர் விழைகாமம்
பொன்னின் அணிமலரின் செல்விதாம் -
தன்மேனி
முத்த முறுவல் முயக்(கு)ஒக்கின்
அன்னத்தின்
பெற்றியரின் என்பேறும் பேறு.
விளக்கவுரை :
