இன்னிலை 16 - 20 of 45 பாடல்கள்
16. முப்பொருள் உண்மை தெளிவான் அருஞ்சீலன்
முப்பொருள் உண்மை உடையான்
அருமுனிவன்
முப்பொருள் உண்மை மடுப்பான்
இறைஆங்கு
முப்பொருள் உண்மைக்(கு) இறை.
விளக்கவுரை :
17. கால்கலத்தால் சேர்பொருளும், கண்ணற்றார் தேர்பொருளும்
நாலிரண்டாற் கூடு நலப்பொருளும் -
கோல்தாங்கிக்
கோடும் அரசிற்கு உரியாமே
தொல்புவிக்கீழ்
ஆடும் பொருளோடு அணந்து.
விளக்கவுரை :
18. ஆம்போன் வினையான் அணைவுற்ற பேர்வெறுக்கை
ஓம்(பு)ஒம்(பு) எனமறை கூறத்
தலைப்பெயல்என்
எம்போம் எனவரைதல் ஈட்டுநெறி தேராமை
சாம்போழ்(து) அலறும் தகைத்து.
விளக்கவுரை :
19. பட்டாங்குத் தூயர் பழிச்சற்(கு) உரியராய்
ஒட்டின்(று) உயர உலகத்தோர் - கட்டளை
யாம்வெறுக்கை யின்றி அமையாராம்
மையாவின்
ஆம்வெறுக்கை நிற்க உடம்பு.
விளக்கவுரை :
3. இன்பப் பால்
20. அறங்கரை நாவானம் ஆய்மயிலார் சீர்இல்
லறங்கரையா நாப்பண் அடைவாம் -
புறங்கரையாத்
திண்மை நிலையின் உயர்புலத்தில்
சேர்வாம்ஈண்(டு)
எண்நிலைக்(கு) உய்வாய் இது.
விளக்கவுரை :
