இன்னிலை 11 - 15 of 45 பாடல்கள்
11. உண்மையொராப் பித்தர் உடைமை மயக்கென்ப
வண்மையுற ஊக்கல் ஒருதலையே - கண்ணீர்
இருபாலும் தோன்றன்ன ஈர்க்கலார்
போழ்வாள்
இருபால் இயங்கலினோ(டு) ஒப்பு.
விளக்கவுரை :
12. உடைமையறா(து) ஈட்டல் உறுதுணையாம் யாண்டும்
உடைமையராச் சென்றக்கால் ஊரெல்லாம்
சுற்றம்
உடைமைக்கோல் இன்றங்குச் சென்றக்கால்
சுற்றம்
உடையவரும் வேறு படும்.
விளக்கவுரை :
13. மண்ணீர் உடையார் வழங்கிச் சிறுகாலைத்
தண்ணீரார் சாரும் நிலம்சார்வர் -
உண்ணீர்
அறியின் அருஞ்செவிலி மாண்பொருளே
வெண்ணீர்ச்
சிறியரையும் ஏர்ப்படுத்தும் செய்.
விளக்கவுரை :
14. மெய்வலியும் செல்நிலையும் வாழ்நாளும் தூஒழுக்கும்
மெய்யா அளிக்கும் வெறுக்கையிலார் -
வையத்துப்
பல்கிளையும் வாடப் பணையணைதோள்
சேய்திரங்க
ஒல்(கு)உயிர்நீத்(து) ஆரும் நரகு.
விளக்கவுரை :
15. குருட்டாயன் நீள்கானம் கோடல் சிவணத்
தெருட்டாயம் காலத்தால் சேரான் -
பொருட்டாகான்
நல்லறமும் பேணானாம் நாரமிவர்த்
தானாம்
பொல்லாங்கு உறைவிடமாம் புல்.
விளக்கவுரை :
