ஐங்குறு நூறு
16 - 20 of 500 பாடல்கள்
16. ஓங்குபூ வேழத்துத் தூம்புடைத்
திரள்கால்
சிறுதொழு
மகளிர் அஞ்சனம் பெய்யும்
பூக்கஞல்
ஊரனை யுள்ளிப்
பூப்போல்
உண்கண் பொன்போர்த் தனவே.
விளக்கவுரை :
17. புதன்மிசை நுடங்கும் வேழ வெண்பூ
விசும்பாடு
குருகின் தன்றும் ஊரன்
புதுவோர்
மேவலன் ஆகலின்
வறிதா
கின்றுஎன் மடங்கெழு நெஞ்சே.
விளக்கவுரை :
18. இருஞ்சா யன்ன செருந்தியொடு வேழம்
கரும்பின்
அலம்ரும் கழனி ஊரன்
பொருந்து
மல ரன்னஎன் கண்ணழப்
பிரிந்தனன்
அல்லனோ பிரியலென் என்றே.
விளக்கவுரை :
19. எக்கர் மாஅத்துப் புதுப்பூம்
பெருஞ்சினை
புணர்ந்தோர்
மெய்ம்மணங்க் கமழும் தண்பொழில்
வேழவெண்பூ
வெள்ளுகை சீக்கும்
ஊரன்
ஆகலின் கலங்கி
மாரி
மலரின் கண்பனி யுகுமே.
விளக்கவுரை :
20. அறுசில் கால அஞ்சிறைத் தும்பி
நூற்றிதழ்த்
தாமரைப் பூச்சினை சீக்கும்
காம்புகண்
டன்ன தூம்புடை வேழத்துத்
துறைநணி
யூரனை உள்ளியென்
இறையேர்
எல்வளை நெகிழ்புஓ டும்மே.
விளக்கவுரை :