திரிகடுகம் 11 - 15 of 100 பாடல்கள்


திரிகடுகம் 11 - 15 of 100 பாடல்கள்

ஊரவர் துன்பப்படும் குற்றம் உடையவை

11. விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் வீழக்
களியாதான் காவா துரையும் - தெளியாதான்
கூரையுள் பல்காலும் சேறலும் இம்மூன்றும்
ஊரெல்லாம் நோவ துடைத்து.

விளக்கவுரை :

நன்மை அளிப்பவை

12. தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது.

விளக்கவுரை :

பெறற்கு அரியார்

13. சீலம் அறிவான் இளங்கிளை சாலக்
குடியோம்பல் வல்லான் அரசன் - வடுவின்றி
மாண்ட குணத்தான் தவசியென்ற இம்மூவர்
யாண்டும் பெறற்கரி யார்.

விளக்கவுரை :

அறிவுடையார் அடையாதவை

14. இழுக்கல் இயல்பிற்று இளமை பழித்தவை
சொல்லுதல் வற்றாகும் பேதைமை - யாண்டும்
செறுவொடு நிற்கும் சிறுமைஇம் மூன்றும்
குறுகார் அறிவுடை யார்.

விளக்கவுரை :

நட்புக் கொள்ளத் தகாதவர்.

15. பொய்வழங்கி வாழும் பொறியறையும் கைதிரிந்து
தாழ்விடத்து நேர்கருதும் தட்டையும் - ஊழினால்
ஒட்டி வினைநலம் பார்ப்பானும் இம்மூவர்
நட்கப் படாஅ தவர்.

விளக்கவுரை :

திரிகடுகம், நல்லாதனார், thirikadugam, nallathanaar, tamil books