ஐங்குறு நூறு 101 - 105 of 500 பாடல்கள்



ஐங்குறு நூறு 101 - 105 of 500 பாடல்கள்

11. தாய்க்கு உரைத்த பத்து.

101. அன்னை வாழிவேண் டன்னை உதுக்காண்
ஏர்கொடிப் பாசடும்பு பரியஊர்பு இழிபு
நெய்தல் மயக்கி வந்தன்று நின்மகள்
பூப்போல் உண்கண் மரீஇய
நோய்க்குமருந் தாகிய கொண்கன் தேரே.

விளக்கவுரை :

102. அன்னை வாழிவேண் டன்னை நம்மூர்
நீல்நிறப் பெருங்கடல் புள்ளின் ஆனாது
துன்புறு துயரம் நீங்க
இன்புற இசைக்கும் அவர் தேர்மணிக் குரலே.

விளக்கவுரை :

103. அன்னை வாழிவேண் டன்னை புன்னையொடு
ஞாழல் பூக்கும் தண்ணந் துறைவன்
இவட்குஅமைந் தனெனால் தானே
தனக்கு அமைந்த தன்றுஇவள் மாமைக் கவினே.

விளக்கவுரை :

104. அன்னை வழிவேண் டன்னை நம்மூர்ப்
பலர்மடி பொழுதின் நலம்மிகச் சாஅய்
நள்ளென வந்த இயல்தேர்ச்
செல்வக் கொண்கன் செல்வனஃ தூரே.

விளக்கவுரை :

105. அன்னை வாழிவேண் டன்னை முழங்குகடல்
திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்
தணம் த்.¤றவன் வந்தெனப்
பொன்னினும் சிவந்தன்று கண்டிசின் நூதலே.

விளக்கவுரை :

ஐங்குறு நூறு, கூடலூர் கிழார், ainkurunooru, koodalur kizhaar, ettu thogai, tamil books