திரிகடுகம் 1 - 5 of 100 பாடல்கள்


திரிகடுகம் 1 - 5 of 100 பாடல்கள்

காப்பு

கண்ணகல் ஞாலம் அளந்துதூஉம் காமருசீர்த்
தண்ணறும் பூங்குருந்தம் பாய்த்ததூஉம் - நண்ணிய
மாயச் சகடம் உதைத்தூஉம் இம்மூன்றும்
பூவைப்பூ வண்ணன் அடி.

விளக்கவுரை :

நூல்

1. அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய
தொல்குடியின் மாண்டார் தெடார்ச்சியும் - சொல்லின்
அரில்அகற்றும் கேள்வியார் நட்பும் இம்மூன்றும்
திரிகடுகம் போலு மருந்து.

விளக்கவுரை :

ஒழுக்கமுடையார் தொழில்கள்

2. தன்குணம் குன்றாத் தகைமையும் தாவில்சீர்
இன்குணத்தார் ஏவினசெய்தலும் - நன்குணர்வின்
நான்மறை யாளர் வழிச்செலவும் இம்மூன்றும்
மென்முறை யாளர் தொழில்.

விளக்கவுரை :

அறியாமையால் வரும் கேடு

3. கல்லார்க்கு இனனாய் ஒழுகலும் காழ்கொண்ட
இல்லாளைக் கோலால் புடைத்தலும் - இல்லம்
சிறியாரைக் கொண்டு புகலுமிம் மூன்றும்
அறியாமை யால்வரும் கேடு.

விளக்கவுரை :

சாவதற்குரியவன் தொழில்கள்

4. பகைமுன்னர் வாழ்க்கை செயலும் தொகைநின்ற
பெற்றத்துள் கோலின்றிச் சேறலும் - முற்றன்னைக்
காய்வானைக் கைவாங்கிக் கோடலும் இம்மூன்றும்
சாவ வுறுவான் தொழில்.

விளக்கவுரை :

அருந்துன்பம் காட்டும் நெறி

5. வழங்காத் துறையிழிந்து நீர்ப்போக்கும் ஒப்ப
விழைவிலாப் பெண்டீர்த்தோள் சேர்வும் - உழந்து
விருந்தினனாய் வேற்றூர் புகலும் இம்மூன்றும்
அருந்துயரம் காட்டு நெறி.

விளக்கவுரை :

திரிகடுகம், நல்லாதனார், thirikadugam, nallathanaar, tamil books