ஐங்குறு நூறு 76 - 80 of 500 பாடல்கள்



ஐங்குறு நூறு 76 - 80 of 500 பாடல்கள்

76. பஞ்சாய்க் கூந்தல் பசுமலர்ச் சுணங்கின்
தண்புணல் ஆடித்தல் நல்ம்மேம் பட்டனள்
ஒள்தொடி மடவரால் நின்னோடு
அந்தர மகளிர்க்குத் தெய்வமும் போன்றே.

விளக்கவுரை :

77. அம்ம வாழியோ மகிழ்நநின் மொழிவல்
பேரூர் அலர்எழ நீரலைக் கலங்கி
நின்னொடு தண்புணல் ஆடுதும்
எம்மோடு சென்மோ செல்லல்நின் மனையே.

விளக்கவுரை :

78. கதிரிலை நெடுவேல் கடுமான் கிள்ளி
மதில்கொல் யானையின் கதழ்புநெறி வந்த
சிறையழி புதுப்புனல் ஆடுகம்
எம்மொடு கொண்மோஎம் தோள்புரை புனையே.

விளக்கவுரை :

79. புதுப்புனல் ஆடி அமர்த்த கண்ணள்
யார்மகள் இவளெனப் பற்றிய மகிழ்ந
யார்மகள் ஆயினும் அறியா
நீயார் மகனைஎம் பற்றியோயே.

விளக்கவுரை :

80. புலக்குவேம் அல்லேம் பொய்யாது உரைமோ
நலத்தகு மகளிர்க்குத் தோள்துணை யாகித்
தலைப்பெயல் செம்புனல் ஆடித்
தவநனி சிவந்தன மகிழ்நநின் கண்ணே.

விளக்கவுரை :

ஐங்குறு நூறு, கூடலூர் கிழார், ainkurunooru, koodalur kizhaar, ettu thogai, tamil books