திணை மொழி ஐம்பது 6 - 10 of 50 பாடல்கள்
6. யானை உழலும் மணிகிளர் நீள்வரைக்
கானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம்
ஏனலுள் ஐய! வரவுமற்(று) என்னைகொல்
காணினும் காய்வர் எமர்.
விளக்கவுரை :
7. யாழும் குழலும் முழவும் இயைந்தன
வீழும் அருவி விறன்மலை நன்னாட!
மாழைமான் நோக்கியும் ஆற்றாள்
இரவரின்
ஊரறி கெளவை தரும்.
விளக்கவுரை :
8. வேங்கை மலர வெறிகமழ் தண்சிலம்பின்
வாங்கமை மென்தோள் குறவர் மகளிரேம்
சோர்ந்து குருதி ஒழுகமற்(று)
இப்புறம்
போந்த(து)இல் ஐய! களிறு.
விளக்கவுரை :
9. பிணிநிறம் தீர்ந்து பெரும்பணைத்தோள் வீங்க
மணிமலை நாடன் வருவான்கொல் தோழ!
கணிநிறை வேங்கை மலர்ந்துவண்டு
ஆர்க்கும்
அணிநிற மாலைப் பொழுது.
விளக்கவுரை :
10. பலவின் பழம்பெற்ற பைங்கட் கடுவன்
எலஎன்(று) இணைபயிரும் ஏகல்சூழ்
வெற்பன்
புலவுங் கொல் தோழி! புணர்வறிந்(து)
அன்னை
செலவுங் கடிந்தாள் புனத்து.
விளக்கவுரை :
