இன்னிலை 36 - 40 of 45 பாடல்கள்
36. உள்ளவா சேறல் இயைபெனினும் போம்வாய
வெள்ளத்(து) அனசேறல் வேண்டல் -
மனைக்கிழவன்
நள்அளவின் மிக்காய கால்தொழிலை
ஓம்பலே
தெள்அறிஞர் கண்ட நெறி.
விளக்கவுரை :
37. ஐங்குரவர் ஓம்பல் இனல்நீக்கல் சேர்ந்தோர்க்குப்
பைங்கூடு களைகணாப் பார்த்தளித்தல் =
நையுளத்தார்க்(கு)
உற்ற பரிவுஈர்த்தல் எண்ணான்(கு)
அறநெறியில்
உத்த புரிதல் கடன்.
விளக்கவுரை :
38. நல்லினம் சாரல் நயணுணர்தல் பல்லாற்றான்
நல்லினம் ஓம்பல் பொறையாளல் -
ஒல்லும்வாய்
இன்னார்க்(கு) இனிய புரிதல்
நெறிநிற்றல்
நன்னாப்பண் உய்ப்பதோர் ஆறு.
விளக்கவுரை :
39. முனியான் அறம்மறங்கள் முக்குற்றம் பேணான்
கனிகாக்கும் ஒண்மை உறைப்படுத்தும்
பண்போல்
பனிநிலத்தின் வித்தாய்ப் பெயரான் நடுக்கற்(று)
இனியனா வான்மற் றினி.
விளக்கவுரை :
4.2 துறவியல்
40. முப்பாலை வீழ்வார் விலங்கார் செறும்பாவை
முப்பால் மயக்(கு)ஏழ் பிறப்பாகி -
எப்பாலும்
மெய்ப்பொருள் தேறார் வெளிஒரார்
யாண்டைக்கும்
பொய்ப்பாலை உய்வாய்ப் போந்து.
விளக்கவுரை :
