ஐங்குறு நூறு
31 - 35 of 500 பாடல்கள்
4. தோழிக்கு உரைத்த பத்து
31. அம்ம வாழி தோழி மகிழ்நன்
கடனன்று
என்னும் கொல்லோ
நம்மூர்
முடமுதிர் மருதத்துப் பெருந்துறை
உடனாடு
ஆயமோடு உற்ற சூளே.
விளக்கவுரை :
32. அம்ம வாழி தோழி மகிழ்நன்
ஒருநாள்
நம்மில் வந்ததற்கு எழுநாள்
அழுப
என்பஅவன் பெண்டிர்
தீயுறு
மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே.
விளக்கவுரை :
33. அம்ம வாழி தோழி மகிழ்நன்
மருதுயர்ந்து
ஓங்கிய விரிபூம் பெருந்துறைப்
பெண்டிரோடு
ஆடும் என்பதன்
தண்தார்
அகலம் தலைத்தலைக் கொளவே.
விளக்கவுரை :
34. அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பொய்கைப்
பூத்த புழற்கால் ஆம்பல்
தாதுஏர்
வண்ணம் கொண்டன
ஏதி
லாளற்குப் பசந்தஎன் கண்ணே.
விளக்கவுரை :
35. அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பொய்கை
ஆம்பல் நார்உரி மென்கால்
நிறத்தினும்
நிழற்றுதல் மன்னே
இனிப்பசந்
தன்றுஎன் மாமைக் கவினே.
விளக்கவுரை :