மணிமேகலை 1841 - 1860 of 4856 அடிகள்

மணிமேகலை 1841 - 1860 of 4856 அடிகள்

manimegalai

1841. தங்கா வேட்கையின் தானும் செல்வுழி
நளி இரு முந்நீர் வளி கலன் வௌவ
ஒடி மரம் பற்றி ஊர் திரை உதைப்ப
நக்க சாரணர் நாகர் வாழ் மலைப்
பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆயினன்
நாவாய் கேடுற நல் மரம் பற்றிப்
போயினன் தன்னோடு உயிர் உயப் போந்தோர்
"இடை இருள் யாமத்து எறி திரைப் பெருங் கடல்
உடை கலப் பட்டு ஆங்கு ஒழிந்தோர் தம்முடன்
சாதுவன் தானும் சாவுற்றான்" என

விளக்கவுரை :


[ads-post]

1851. ஆதிரை நல்லாள் ஆங்கு அது தான் கேட்டு
"ஊரீரேயோ! ஒள் அழல் ஈமம்
தாரீரோ?" எனச் சாற்றினள் கழறி
சுடலைக் கானில் தொடு குழிப்படுத்து
முடலை விறகின் முளி எரி பொத்தி
"மிக்க என் கணவன் வினைப் பயன் உய்ப்பப்
புக்குழிப் புகுவேன்" என்று அவள் புகுதலும்
படுத்து உடன் வைத்த பாயல் பள்ளியும்
உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது
ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில்

விளக்கவுரை :

மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books