மணிமேகலை 1821 - 1840 of 4856 அடிகள்

மணிமேகலை 1821 - 1840 of 4856 அடிகள்

manimegalai

1821. தான் தனி ஓங்கிய தகைமையள் அன்றோ
ஆதிரை நல்லாள்? அவள் மனை இம் மனை
நீ புகல்வேண்டும் நேர் இழை!' என்றனள்
வட திசை விஞ்சை மா நகர்த் தோன்றித்
தென் திசைப் பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை
மாதவன் தன்னால் வல் வினை உருப்ப
சாவம் பட்டு தனித் துயர் உறூஉம்
வீவு இல் வெம் பசி வேட்கையொடு திரிதரும்
காயசண்டிகை எனும் காரிகை தான் என்

16. ஆதிரை பிச்சையிட்ட காதை


'ஈங்கு இவள் செய்தி கேள்' என விஞ்சையர்

விளக்கவுரை :


[ads-post]

1831. பூங்கொடி மாதர்க்குப் புகுந்ததை உரைப்போள்
'ஆதிரை கணவன் ஆய் இழை! கேளாய்
சாதுவன் என்போன் தகவு இலன் ஆகி
அணி இழை தன்னை அகன்றனன் போகி
கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க
வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி
கெட்ட பொருளின் கிளை கேடுறுதலின்
பேணிய கணிகையும் பிறர் நலம் காட்டி
"காணம் இலி" என கையுதிர்க்கோடலும்
வங்கம் போகும் வாணிகர் தம்முடன்

விளக்கவுரை :

மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books