மணிமேகலை 2741 - 2760 of 4856 அடிகள்

மணிமேகலை 2741 - 2760 of 4856 அடிகள்

manimegalai

2741. தன் முன் தோன்றல் தகாது ஒழி நீ" எனக்
கன்னி ஏவலின் காந்த மன்னவன்
"இந் நகர் காப்போர் யார்?" என நினைஇ
"நாவல் அம் தண் பொழில் நண்ணார் நடுக்குறக்
காவல் கணிகை தனக்கு ஆம் காதலன்
இகழ்ந்தோர்க் காயினும் எஞ்சுதல் இல்லோன்
ககந்தன் ஆம்" எனக் காதலின் கூஉய்
"அரசு ஆள் உரிமை நின்பால் இன்மையின்
பரசுராமன் நின்பால் வந்து அணுகான்
அமர முனிவன் அகத்தியன் தனாது

விளக்கவுரை :


[ads-post]

2751. துயர் நீங்கு கிளவியின் யான் தோன்று அளவும்
ககந்தன் காத்தல்! காகந்தி" என்றே
இயைந்த நாமம் இப் பதிக்கு இட்டு ஈங்கு
உள்வரிக் கொண்டு அவ் உரவோன் பெயர் நாள்
தெள்ளு நீர்க் காவிரி ஆடினள் வரூஉம்
பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின்
யாப்பறை என்றே எண்ணினன் ஆகி
காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்
"நீ வா" என்ன நேர் இழை கலங்கி
"மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம்

விளக்கவுரை :

மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books