மணிமேகலை 2621 - 2640 of 4856 அடிகள்

மணிமேகலை 2621 - 2640 of 4856 அடிகள்

manimegalai

2621. "தன் உரு இல்லோன் பிற உருப் படைப்போன்
அன்னோன் இறைவன் ஆகும்" என்போர்களும்
"துன்ப நோன்பு இத் தொடர்ப்பாடு அறுத்து ஆங்கு
இன்ப உலகு உச்சி இருத்தும்" என்போர்களும்
"பூத விகாரப் புணர்ப்பு" என்போர்களும்
பல் வேறு சமயப் படிற்று உரை எல்லாம்
அல்லி அம் கோதை! கேட்குறும் அந் நாள்
"இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார்
அறனோடு என்னை?" என்று அறைந்தோன் தன்னைப்
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த

விளக்கவுரை :

[ads-post]

2631. நறு மலர்க் கோதை! எள்ளினை நகுதி"
எள்ளினை போலும் இவ் உரை கேட்டு! இங்கு
ஒள்ளியது உரை!" என உன் பிறப்பு உணர்த்துவை
"ஆங்கு நிற்கொணர்ந்த அருந் தெய்வம் மயக்க
காம்பு அன தோளி! கனா மயக்கு உற்றனை"
என்று அவன் உரைக்கும் இளங் கொடி நல்லாய்!
"அன்று" என்று அவன் முன் அயர்ந்து ஒழிவாயலை
"தீவினை உறுதலும் செத்தோர் பிறத்தலும்
வாயே" என்று மயக்கு ஒழி மடவாய்
வழு அறு மரனும் மண்ணும் கல்லும்

விளக்கவுரை :

மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books