மணிமேகலை 2361 - 2380 of 4856 அடிகள்

மணிமேகலை 2361 - 2380 of 4856 அடிகள்

manimegalai

2361. வலி கெழு தடக் கை மாவண்கிள்ளி!
ஒளியொடு வாழி ஊழிதோறு ஊழி!
வாழி எம் கோ மன்னவர் பெருந்தகை!
கேள் இது மன்னோ! கெடுக நின் பகைஞர்
யானைத்தீ நோய்க்கு அயர்ந்து மெய் வாடி இம்
மா நகர்த் திரியும் ஓர் வம்ப மாதர்
அருஞ் சிறைக்கோட்டத்து அகவயின் புகுந்து
பெரும் பெயர் மன்ன! நின் பெயர் வாழ்த்தி
ஐயப் பாத்திரம் ஒன்று கொண்டு ஆங்கு
மொய் கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள்

விளக்கவுரை :

[ads-post]

2371. ஊழிதோறு ஊழி உலகம் காத்து
வாழி எம் கோ மன்னவ!' என்றலும்
'வருக வருக மடக்கொடி தான்' என்று
அருள் புரி நெஞ்சமொடு அரசன் கூறலின்
வாயிலாளரின் மடக்கொடி தான் சென்று
'ஆய் கழல் வேந்தன் அருள் வாழிய!' எனத்
'தாங்கு அருந் தன்மைத் தவத்தோய் நீ யார்?
யாங்கு ஆகியது இவ் ஏந்திய கடிஞை?' என்று
அரசன் கூறலும் ஆய் இழை உரைக்கும்
'விரைத் தார் வேந்தே! நீ நீடு வாழி!

விளக்கவுரை :

மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books