மணிமேகலை 3621 - 3640 of 4856 அடிகள்
3621. முதல் என மொழிவது கருக்கொள் முகில் கண்டு
"இது மழை பெய்யும் என இயம்பிடுதல்
என்னும் ஏதுவின் ஒன்று முக் காலம்
தன்னில் ஒன்றில் சார்ந்து உளதாகி
மண்ட உயிர் முதல் மாசு இன்றாகி
காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல்
உவமம் ஆவது ஒப்புமை அளவை
"கவய மா ஆப் போலும்" எனக் கருதல்
ஆகம அளவை அறிவன் நூலால்
"போக புவனம் உண்டு" எனப் புலங்கொளல்
விளக்கவுரை :
[ads-post]
3631. அருத்தாபத்தி "ஆய்க்குடி கங்கை
இருக்கும்" என்றால் கரையில் என்று எண்ணல்
இயல்பு யானைமேல் இருந்தோன் தோட்டிற்கு
அயல் ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல்
ஐதிகம் என்பது உலகு மறை "இம் மரத்து
எய்தியது ஓர் பேய் உண்டு" எனத் தெளிதல்
அபாவம் என்பது இன்மை "ஓர் பொருளைத்
தவாது அவ் இடத்துத் தான் இலை" என்றல்
மீட்சி என்பது "இராமன் வென்றான்" என
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்
விளக்கவுரை :
மணிமேகலை 3621 - 3640 of 4856 அடிகள்
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books