மணிமேகலை 3221 - 3240 of 4856 அடிகள்

மணிமேகலை 3221 - 3240 of 4856 அடிகள் 

manimegalai

3221. பிற அறம் கேட்ட பின் நாள் வந்து உனக்கு
இத் திறம் பலவும் இவற்றின் பகுதியும்
முத்து ஏர் நகையாய்! முன்னுறக் கூறுவல்'
என்று அவன் எழுதலும் இளங்கொடி எழுந்து
நன்று அறி மாதவன் நல் அடி வணங்கி
'தேவியும் ஆயமும் சித்திராபதியும்
மாதவர் நல் மொழி மறவாது உய்ம்மின்
இந் நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின்
"மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று" என்குவர்
ஆபுத்திரன் நாடு அடைந்து அதன் பின் நாள்

விளக்கவுரை :

[ads-post]

3231. மாசு இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி
வஞ்சியுள் புக்கு மா பத்தினி தனக்கு
எஞ்சா நல் அறம் யாங்கணும் செய்குவல்
"எனக்கு இடர் உண்டு" என்று இரங்கல் வேண்டா
மனக்கு இனியீர்!" என்று அவரையும் வணங்கி
வெந்துறு பொன் போல் வீழ் கதிர் மறைந்த
அந்தி மாலை ஆய் இழை போகி
உலக அறவியும் முதியாள் குடிகையும்
இலகு ஒளிக் கந்தமும் ஏத்தி வலம் கொண்டு
அந்தரம் ஆறாப் பறந்து சென்று ஆய் இழை

விளக்கவுரை :

மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books